சீனாவில் அதிகாலையில் நடந்த பயங்கர சம்பவம்... 14 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி! என்ன நடந்தது?
சீனா தற்காப்பு கலை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெனான் மாகாணத்தின் Zhecheng பகுதியில் உள்ள Zhenxing என்ற தற்காப்பு கலை மையத்திலே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட தீ மளமளவென பரவியுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த 16 பேரில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Zhenxing தற்காப்பு கலை மையத்தில் பகல் முழுவதும் தற்காப்பு கலை பயிற்சி பெரும் குழந்தைகள், தினமும் இரவில் மையத்திலே தங்குவார்கள் என தீ விபத்தில் உயிர்பிழைத்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது மையத்தின் 2வது தளத்தில் தங்கியிருந்து குழந்தைகளில் பலர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு 7 முதல் 16 வயது இருக்கும் என ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தீ விபத்து எப்படி எற்பட்டது என்பது குறித்து தகவல் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்தை தொடர்ந்து மையத்தின் பொறுப்பாளரை கைது செய்து விசாரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.