ஐக்கிய அரபு நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து (வீடியோ)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்களின் கதி
கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் பேருந்துகள் மூலம் அஜ்மான் மற்றும் ஷார்ஜாவில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்றுள்ளனர்.
மேலும் அங்கு ஏற்பட்ட உயிர்சேதங்கள் குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.
பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்றுள்ளார்கள். ஆனால் தீ தொடர்ந்து பரவிக்கொண்டே தான் இருந்துள்ளது.
ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை தேடும் முயற்சியில் பொலிஸார் இருப்பதாகவும். தங்களது புகாரை அளிக்குமாறு கூறியுள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: Residential high-rise building in Ajman, the United Arab Emirates is currently on fire.pic.twitter.com/QK8vubiKHZ
— The Spectator Index (@spectatorindex) June 26, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |