நடுக்கடலில் சென்ற கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீரென ஏற்பட்ட தீ விபத்து
பிலிப்பைனிஸின் லேடி மேரி ஜாய் 3(Lady Mary Joy 3) என்ற கப்பல் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
@EPA-EFE/PCG
உடனே கப்பலில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கடலில் குதித்துள்ளனர். இதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை மற்றும் மீனவர்கள் உட்பட மீட்புப் படையினர் 195 பயணிகளையும் 35 பணியாளர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
@ep
எரிந்த கப்பலில் 18 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முந்தைய இறப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக பசிலன் கவர்னர் ஜிம் சல்லிமான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
31 பேர் உயிரழப்பு
விபத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் கப்பலிலுள்ள குளிரூட்டப்பட்ட அறையில் 31 பேரது உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
@afp
பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையைச் சேர்ந்த கொமடோர் ரெஜார்ட் மார்ஃப்,
"தீ விபத்து ஏற்பட்டபோது மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் பீதியடைந்தனர். தீ பரவியதால் கேப்டன் கப்பலை தரையிறக்கினார். பின்பு சில பயணிகள் பயத்தில் கடலில் குதித்து நீந்தியுள்ளனர்." என கூறியுள்ளார்.
இறந்தவர்களில் ஆறு மாத குழந்தை உட்பட குறைந்தது மூன்று குழந்தைகளாவது இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
@afp
கப்பலிலிருந்த பயணிகளின் எண்ணிக்கை கப்பலின் மேனிஃபெஸ்ட்டில் பட்டியலிடப்பட்ட 205 ஐத் தாண்டியதால் மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று சல்லிமான் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்கள் ஜாம்போங்கா மற்றும் பாசிலானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர், அங்கு காயமடைந்தவர்களுக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.