புறப்பட்ட 7 நிமிடத்திற்குள் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 22 பேர் உயிர் தப்பினர்
நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களுக்குள் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சம்மிட் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட 7 நிமிடத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
22 பேருடன் சென்ற விமானம் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொக்ரா விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானத்தில் 18 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்தனர்.
livemint
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு நேபாளத்தில் உள்ள முஸ்டாங் உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கு ஆகும். இப்பகுதி தவுலகிரி மற்றும் அன்னபூர்ணா மலைகளுக்கு இடையே செங்குத்தாக உள்ள வறண்ட நிலப்பரப்பாகும்.