இளம்பெண் விமானத்தில் பயணிப்பதற்காக இருக்கைகள் அகற்றம்! காரணம் என்ன தெரியுமா? சுவாரசிய புகைப்படங்கள்
உலகின் உயரமான பெண் தனது வாழ்வில் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்தது தொடர்பிலான சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிக உயரமான பெண்
மிகவும் உயரமான மனிதர்கள் பேருந்து, ரயில், விமானம் போன்றவைகளில் பயணிக்கும் போது சிரமங்கள் பலவற்றை சந்திப்பார்கள்.
அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் Rumeysa Gelgi (25). உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் இவரின் உயரம் 7 அடி 7 அங்குலம் ஆகும்.
shethepeople
13 மணி நேர பயணம்
தனது உயரம் காரணமாக Rumeysa வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று Rumeysa கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் அகற்றப்பட்டு அது இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து Rumeysa வசதியாக ஓய்வெடுத்தபடி பயணம் செய்ய வைத்திருக்கிறது.
இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு Rumeysa கெல்கி சென்றடைந்திருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை Rumeysa வெளியிட்டுள்ளார். அதில், விமான ஊழியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் இது தனது முதல் விமானப் பயணம் என்றாலும், நிச்சயமாக தன்னுடைய கடைசி பயணமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
dailynews