900 விமானங்கள் வரையில் ரத்து... பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஜப்பானில் புயல் காரணமாக சுமார் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 240,000 மக்களுக்கு பாதுகாப்பு கருதி வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் காற்று
பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான லான் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.
@reuters
குறித்த புயல் வடக்கு நோக்கி நகரும் நிலையில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியது. நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என அதிகாரிகள் தரப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் லான் புயல் மந்தமாக நகர்ந்தது எனவும், அதே பகுதிகளில் பல மணி நேரம் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்திருந்தனர்.
90,000 வீடுகளுக்கு மின் தடை
லான் புயல் காரணமாக 2 டசின் மக்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
@reuters
இதனிடையே, புயல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சாலைகள் சில மூடப்பட்டதுடன், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 90,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது என உரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |