வெற்றி! 35 நிமிடங்கள் அந்தரத்தில் மிரட்டிய பறக்கும் கார்: பிரம்மிக்க வைக்கும் காட்சி
ஸ்லோவாக்கியாவில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
பறக்கும் கார் ஸ்லோவாக்கியாவின் Nitra மற்றும் Bratislava சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே சுமார் 35 நிமிட பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.
இந்த ஏர்காரில் BMW இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் வழக்கமான பெட்ரோல்-பம்ப் எரிபொருளில் இயங்குகிறது.
இந்த ஏர்கார், காரிலிருந்து விமானமாக மாற 2 நிமிடங்கள் 15 வினாடிகள் ஆகும்.
இந்த ஏர்கார் சுமார் 1,000 சி.மீ, 8,200 அடி உயரத்தில் பறக்கக்கூடும் என்றும், இதுவரை 40 மணி நேரம் அந்தரத்தில் பறந்துள்ளதாக எர்கார் படைப்பாளரான பேராசிரியர் Stefan Klein கூறினார்.
இந்த ஏர்கார் பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. நடுவானில் ஏர்கார் மணிக்கு 170 கி.மீ வேகத்தில் சென்றது.
இது மொத்தம் 200 கிலோ தாங்கும், அதவாது 2 நபர்களுடன் பறக்க முடியும்.
இதை டிரோன் போல் பறக்க வைக்க முடியாது, பறக்கவும் தரையிறக்கவும் ஓடுபாதை தேவை என பேராசிரியர் Stefan Klein கூறினார்.