மீதமான சாதத்தை மறுநாள் சூடாக்கி சாப்பிட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்! உஷாரா இருங்க மக்களே
பொதுவாக நம்மில் பலரும் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் தயிர் கலந்து சாப்பிடும் பழைய சோற்றின் ருசியே தனிதான்.
இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது.
இதனால் பல நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல் பிரச்சினை, உடல் உஷ்ணம், வயிறு எரிச்சல் என பலவகையான பிரச்னைகளுக்கும் பழைய சோறு நல்ல மருந்தாகும்.
ஆனால் அதே மீந்துபோன சோறை மறுநாள் சூடாக்கி சுடச்சுட சாப்பிட்டால் அது விஷமாகும் என இங்கிலாந்தைச் சேர்ந்த தேசிய சுகாதார மையம் நடத்திய மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு கூறுவது என்ன?
சமைக்காத அரிசியில் பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியா இருக்கிறது. அது ஃபுட் பாய்சனை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா.
அது சமைத்த பின்பும் உயிர் வாழும் ஆற்றல் கொண்டது. எனவே அந்த உணவை அப்படியே சேமித்து அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் அவை வேகமாக வளரும் ஆற்றல் கொண்டவை.
எனவே அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியது. இது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும்.
இதற்கு என்ன தீர்வு ?
- மீந்த சோறை அப்போதே உடனே ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சூடாக்கி சாப்பிடலாமாம். அதுவும் ஒரு நாளைக்கு மேல் வைத்து சாப்பிடக்கூடாது.
- அதேபோல் காலை சமைத்த உணவு இரவு ஃபிரிட்ஜில் வைத்தால் அதில் பலனில்லை.