உக்ரைனில் அணை ஒன்று உடைக்கப்பட்டதைக் காட்டும் காட்சிகள்: உருவாகியுள்ள அச்சம்
உக்ரைனில் அணை ஒன்று உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அச்சத்தை உருவாக்கியுள்ளன.
நடந்தது என்ன?
ரஷ்யப் படைகள் Kherson நகரிலிருந்து வெளியேறியுள்ளதை உக்ரைன் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள Dnipro நதியின் மீது கட்டப்பட்டுள்ள Nova Kakhovka அணை உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Credit: AFP
அணை எப்படி உடைந்தது?
வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணப்படும் காட்சியானது, அணையானது வேண்டுமென்றே உடைக்கப்பட்டது போல தோன்றுகிறது.
ஆகவே, Kherson நகரை விட்டு வெளியேறும்போது புடினுடைய விசுவாசிகளாகிய ரஷ்யப் படையினர் அந்த அணையை வேண்டுமென்றே சேதப்படுத்தியிருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அணை எப்படி உடைந்தது என்பதோ, யார் உடைத்தார்கள் என்பதோ இதுவரை தெரியவரவில்லை.
Credit: Rex
ஆனால், அந்த அணையை உடைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உக்ரைனும், உக்ரைன் அந்த அணையை உடைக்க திட்டமிட்டு வருவதாக ரஷ்யாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன.
ஆகவே, யார் அணையை சேதப்படுத்தியது என்பது தெரியவில்லை.
சோவியத் யுகத்தில் கட்டப்பட்ட அந்த அணை உடையுமானால், Kherson நகர் பேரழிவை சந்திப்பதுடன், பெருவெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பலியாகும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: AP