எனது வங்கிக்கணக்கில் இவ்வளவு பணமா! கத்தார் உலகக் கோப்பை கால்பந்து ரசிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்
சமீபத்தில் முடிவடைந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து ரசித்து வந்த இரண்டு கால்பந்து ரசிகர்களுக்கு துபாய் Mahzooz டிராவில் பெரிய பரிசு விழுந்துள்ளது.
ஆசியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
பாகிஸ்தானை சேர்ந்தவர் முஷ்ரப் (28). அபுதாபியில் வசிக்கும் இவர் எமிரேட் விமான நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். முஷ்ரப்புக்கு Mahzooz டிராவில் Dh100,000 (இலங்கை மதிப்பில் ரூ. 99,63,291.20) விழுந்துள்ளது.
அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இது பெரிய பணம், என் சேமிப்புக்கு செல்லும் இந்த பணத்தை வைத்து பாகிஸ்தானில் தொழில் தொடங்குவேன் என்றார்.
khaleejtimes
அமெரிக்காவுக்கு செல்ல திட்டம்
Dh100,000 பரிசை வென்ற மற்றொரு பாகிஸ்தானியரான மைக்கேல் கூறுகையில், துபாயில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், எனக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்.
எனது வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகையை ஒருநாள் பார்ப்பேன் என நான் நினைத்து கூட பார்த்ததில்லை என கூறியுள்ளார்.
பரிசு பணத்தில் அமெரிக்காவுக்கு செல்லவும், விலையுயர்ந்த கை கடிகாரம் வாங்கவும் மைக்கேல் திட்டமிட்டுள்ளார்.