சூட்கேஸின் சக்கரங்களில் பல லட்சம் வெளிநாட்டு பணம் கடத்தல்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய நபர்
சூட்கேஸின் சக்கரங்களில் வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்து கடத்த முயன்ற நபர் டெல்லி விமான நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டார்.
சூட்கேஸ் சக்கரங்களில் பணம்
டெல்லி விமான நிலையத்தில் திங்கட்கிழமை காலை 6 மணியளவில், பயணிகளின் நடத்தை அடிப்படையிலான சோதனையின் போது இந்திய பாஸ்போர்ட் உடன் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், விமானம் எண் SG-11/STD-ல் துபாய் செல்ல காத்திருந்த அசாத் என்பவரிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அவரத் சூட்கேஸை பரிசோதனை செய்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, சூட்கேஸின் சக்கரங்களில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
சோதனையின் அடிப்படையில் சூட்கேஸின் சக்கரங்களில், சவுதி ரியால்- 500x65, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திர்ஹான்ஸ்-150 பண நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இவை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,24,800 லட்சம் ஆகும். பின் சம்பந்தப்பட்ட பயணி அசாத் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |