முன்னாள் ஊழியரை முதல் பெண் தலைவராக நியமித்த பிரபல விமான சேவை நிறுவனம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது முன்னாள் விமான ஊழியர் ஒருவரை முதல் பெண் தலைவராக புதன்கிழமை நியமித்துள்ளது.
நிர்வாக பொறுப்பில் செயல்பட்டு
குறித்த நபர், விமான ஊழியராக செயல்பட்டு பின்னர் பதவி உயர்வு பெற்று நிர்வாக பொறுப்பில் செயல்பட்டு வந்துள்ளார். 1985ல் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார் Mitsuko Tottori.
@reuters
அந்த ஆண்டில் தான் ஜபபான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மிக மோசமான விபத்தில் சிக்கியிருந்தது. தற்போது தலைவர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள Mitsuko Tottori எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி அந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
ஆனால் ஜப்பானிய நிறுவனங்கள் பாலின பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், ஏழு நாடுகளின் குழுவில் மிக மோசமான பாலின ஊதிய இடைவெளியைச் சமாளிக்கவும் அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதால் ஜப்பான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
வாய்ப்புகளை உருவாக்கவும்
இந்த நிலையில் ஊடகங்களில் பேசிய Mitsuko Tottori, தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பானது சக பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
@reuters
இதனிடையே, தொற்றுநோய் கால சரிவில் இருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மீண்டு வர வேண்டும் என்பதாலும், சுற்றுலா பயணிகள் ஜப்பானுக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தலைவர் Yuji Akasaka முக்கிய பொறுப்பில் தொடர்வார் என்றே ஜப்பான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |