முன்னாள் மிஸ் இந்தியா... மாமனார் பெரும் கோடீஸ்வரர்: தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம்
மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் போன்ற அழகுப் போட்டிகளில் வென்ற பிறகு பல பெண்கள் இந்தி திரைப்படத்துறையில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
தெலுங்கு படமான இசம்
அவர்கள் பல படங்களில் நடித்து தங்கள் திறமைகளால் பிரபலமான நட்சத்திரங்களாக மாறினர். இருப்பினும், சில முன்னாள் மிஸ் இந்தியா வெற்றியாளர்கள் சினிமாவில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு வேறு பாதைகளைத் தெரிவு செய்தனர்.
அப்படியான ஒருவர்தான் 2015 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற அதிதி ஆர்யா கோடக். மட்டுமின்றி 2015ல் மிஸ் வேர்ல்ட் போட்டியிலும் அதிதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தற்போது 31 வயதாகும் இவர் தெலுங்கு படமான இசம் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், 36 அத்தியாயங்கள் கொண்ட இந்தி தொலைக்காட்சித் தொடரான தந்திராவில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார்.
2021ல் 83 என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் இதுவே அவரது கடைசி திரைப்படமாகவும் அமைந்தது. பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க அவர் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.
சொத்து மதிப்பு 14.6 பில்லியன் டொலர்
2024ல் மாணவர்களுக்கு சர்வதேச கல்வி தொடர்பில் உதவும் பொருட்டு Alum-n-i என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவினார். மேலும், கோடக் மஹிந்திரா வங்கியை நிறுவிய உதய் கோடக் என்ற பெரும் கோடீஸ்வரரின் மகன் ஜெய் கோடக் என்பவரை அதிதி திருமணம் செய்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் உதய் கோடக்கின் மொத்த சொத்து மதிப்பு என்பது 14.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
சண்டிகரில் பிறந்த அதிதி, குருகிராமிற்கு குடிபெயர்ந்தார். அழகுப் போட்டிப் பயணத்துடன், அவர் எர்ன்ஸ்ட் அண்ட் யங்கில் ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றினார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஷாஹீத் சுக்தேவ் கல்லூரியில் வணிகப் படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |