உலகின் நான்கு பெரிய நாடுகள் வீழ்ச்சியடையலாம்... அதிர்ச்சி தரும் பின்னணி
மிக ஆபத்தான வகையில் மக்கள்தொகை குறைந்து வருவதால் உலகின் நான்கு பெரிய நாடுகள் வீழ்ச்சியடைய அதிக வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீழ்ச்சியை எதிர்கொள்ளும்
கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளே தற்போது வீழ்ச்சியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையில் இருப்பதால், மில்லியன் கணக்கான மக்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.நா மன்றத்தின் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,
சீனா எதிர்வரும் 2050க்குள் தனது மக்கள்தொகையில் 8 சதவிகிதம், ஜப்பான் அதன் மக்கள்தொகையில் 18 சதவிகிதம் அளவுக்கு சரிவை எதிர்கொள்ள இருக்கிறார்கள். தென் கொரியா 12 சதவிகிதம், தைவான் 8 சதவிகிதம் அளவுக்கு மக்கள்தொகை சரிவை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
அமெரிக்கா திணறும்
ஆனால் 2050க்குள் அமெரிக்காவை பொறுத்தமட்டில் 12 சதவிகிதம் மக்கள்தொகை அதிகரிக்கும் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கிழக்கு ஆசியா அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது என்றும், ஆனால் அமெரிக்கா புவிசார் அரசியல் ஆதாயத்தை அடைய இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் அதிகரிக்கும் மக்கள்தொகையால் உள்ளூர் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா திணறும் என்றே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை சரிவால், கிழக்கு ஆசிய நாடுகளின் அரசியல், பொருளாதார பங்களிப்பும் உலக அளவில் சரிவடையும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |