பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்
நெதன்யாகு முன்னெடுக்கும் காஸா போரினால் ஏற்பட்ட விரக்தியால் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன.
எதிர்வினை
இரு நாடுகள் தீர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடனே பல நாடுகள் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரித்து வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிப்பதால் இஸ்ரேலிடமிருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியுள்ளது.
மேலும், பாரம்பரியமாக இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துள்ள இந்த நான்கு நாடுகளே எதிர்ப்பையும் மீறி அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன. இவர்களுடன் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
ஜனாதிபதி மேக்ரான்
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையையும், இரு-நாடு தீர்வையும் புதுப்பிக்க, பிரித்தானியா பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் முறையாக அறிவிக்க இருக்கிறார். ஆனால், கிரேட்டர் இஸ்ரேலை கனவு காணும் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய நாடுகள் பலவற்றின் இந்த அதிரடி முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |