பிரான்சுக்குள்ளும் நுழைந்தது Super flu: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
உலக நாடுகள் பலவற்றில் பரவிவரும் Super flu என அழைக்கப்படும் ப்ளூ காய்ச்சல், பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்
Super flu என அழைக்கப்படும் ப்ளூ காய்ச்சல் பிரான்சிலும் பரவத் துவங்கியுள்ள நிலையில், ப்ளூ, கோவிட் மற்றும் bronchitis ஆகிய மூன்று தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களால் பிரான்ஸ் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் சுகாதாரக் காப்பீட்டு அமைப்பு, நாட்டில் மோசமான ஒரு ப்ளூ வைரஸ் பரவுவருவதாகவும், ஏற்கனவே தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டின் குளிர்காலத்தில் மட்டும், பிரான்சில் 17,000 பேர் வரை ப்ளூ காய்ச்சலுக்கு பலியான நிலையில், போதுமான அளவில் மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாததே அதற்குக் காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
Super Flu என்பது என்ன?
ப்ளூ என அழைக்கப்படும் Influenza காய்ச்சல், Influenza வைரஸ் என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த Influenza வைரஸில், A,B,C மற்றும் D என நான்கு வகைகள் உள்ளன.

அவற்றில், இந்த A,B வைரஸ்கள் பொதுவாக குளிர் காலத்தில் ப்ளூ காய்ச்சலை உருவாக்கும்.
அவற்றில் Influenza A வைரஸ்தான் தற்போது தொற்று பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த Influenza A வைரஸிலும் பல துணைப்பிரிவுகள் உள்ளன.
அவற்றில், H3N2 என்றொரு வகை வைரஸ் உள்ளது. அந்த Influenza A H3N2 வைரஸின், subclade K என்னும் மரபணு மாறுபாட்டால் உருவாகும் ப்ளூ தொற்றே, Super Flu என அழைக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |