லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம்: “அவமானம்” என நெதன்யாகு ஆவேசம்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளது.
பிரான்ஸ் கண்டனம்
லெபனான் நாட்டிற்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுக்க துருப்புகளை அனுப்பிய இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசாவில் பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களையும் நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த அறிக்கையில், நாம் இன்று அரசியல் தீர்வுக்கு திரும்புவதற்கான முன்னுரிமையை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நாம் நிறுத்த வேண்டும், பிரான்ஸ் எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
அத்துடன் லெபனானை மற்றொரு காசாவாக மாற்ற முடியாது என்றும், உள்ளூர் சேனல் ஒன்றுக்கு மக்ரோன் அளித்த பேட்டியை குறிப்பிட்டு AFP தகவல் வெளியிட்டுள்ளது.
கோபமடைந்த நெதன்யாகு
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கருத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு கோபமான எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், இஸ்ரேலுக்கு எதிரான ஆயுத ஏற்றுமதி தடைக்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் செயல் “அவமானம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் நாடுகள் ஒரே கோட்டில் நிற்கின்றன, ஆனால் இந்த பயங்கர வாதத்தை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல் மீது ஆயுத தடையை விதிக்கின்றன, இது “அவமானம்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனித நாகரிகத்திற்கு எதிராக நிற்கும் எதிரிகளுக்கு எதிராக 7 முனையில் இஸ்ரேல் போராடுவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |