இந்தியாவுக்கான 26 Rafale Marine ஜெட் ஒப்பந்தத்திற்கான இறுதி விலையை அறிவித்த பிரான்ஸ்
பிரான்ஸ் அரசு இந்தியாவுக்கான 26 ரஃபேல் மெரைன் ஜெட் (Rafale Marine jets deal) ஒப்பந்தத்திற்கு இறுதி விலையை முன்மொழிந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசு, இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ற இறுதி விலை முன்மொழிந்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவலின் இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே கடுமையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதன்படி, இந்திய அதிகாரிகளுக்கு சிறந்த மற்றும் இறுதி விலை வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்கப்படும் 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை, இந்தியக் கடற்படையின் INS விக்ராந்த் என்ற விமானத் தாங்கி கப்பலில் மற்றும் பிற தளங்களில் இந்திய அரசு பயன்படுத்தவுள்ளது.
இதன் மூலம், இந்தியக் கடற்படையின் கடல் தாக்குதல் திறன் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உத்தம் ரேடார் (Uttam radar) மற்றும் Astra beyond visual range missiles, Rudram anti-radiation missiles உள்ளிட்ட ஆயுதங்களை இந்த விமானங்களில் பொருத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
அனால், இது அதிக செலவையும் நீண்ட நேரத்தையும் கொண்டதாக இருக்கலாம். இந்த ஒப்பந்தம், செலவுப் பரிமாற்றங்களை மற்றும் இந்திய வான்படை தேவைகளையும் கணக்கில் கொண்டு முடிவுக்கு வர உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்த நிதியாண்டின் இறுதிக்கு முன்பாக ஒப்புதலுக்காக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France proposes final offer price for 26 Rafale Marine jet deal, India France 26 Rafale Marine jet deal, India-France Rafale Deal