பிரெஞ்சு அதிபருக்கு விருப்பமான உணவகத்திற்குத் தீவைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!
பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனுக்கு மிகவும் பிடித்த உணவகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்ததாகத் தெரியவந்துள்ளது.
அதிபர் இமானுவெல் மக்ரோனுக்கு மிகவும் பிடித்த உணவகம்
சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தொடர்பான பதட்டங்கள் தொடரும் நிலையில், பாரிஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் (Emmanuel Macron) விருப்பமான உணவகங்களில் ஒன்றைத் தாக்கியுள்ளனர்.
பாரிஸ் நகரில் உள்ள லா ரோடோண்டே (La Rotonde) உணவகத்தை நோக்கி தீவைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசியுள்ளனர்.
elysee.fr/AFP
2017-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் வெற்றிபெற்ற பின்பு அந்த உணவகத்தில்தான் அதிபர் மக்ரோன் கொண்டாட்டங்களை நடத்தினார்.
ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்துப் பிரான்ஸில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Reuters
ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டம்
இந்த ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டத்தின்கீழ், ஓய்வுபெறும் வயது 62-லிருந்து 64-ஆக உயர்த்தப்படும். அதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் வாரந்தோறும் ஒரு நாள் தேசிய அளவில் வேலைநிறுத்தமும் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் நடத்திவருகின்றனர்.
பல வாரங்கள் போராட்டங்கள் தொடரும் நிலையிலும், அரசாங்கம் அதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. இந்த திட்டத்தின் அமலாக்கம் குறித்து வரும் ஏப்ரல் 14-ஆம் திகதி முடிவெடுக்கப்படவுள்ளது.
AP