மனைவியை பொது இடத்தில் தாக்கிய பிரான்ஸ் விளையாட்டு பிரபலம்: ஓராண்டு சிறை தண்டனை
பிரான்ஸ் ரக்பி விளையாட்டு நட்சத்திரம் முகமது ஹௌவாஸ் அவரது மனைவியை பொதுவெளியில் தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
மனைவியை பொதுவெளியில் தாக்கிய பிரான்ஸ் நட்சத்திரம்
பொது இடத்தில் புகை பிடித்து கொண்டு இருந்த மனைவி இமானே-வை(Imane) தாக்கிய பிரான்ஸ் ரக்பி(Rugby) விளையாட்டு நட்சத்திரம் முகமது ஹௌவாஸ்-க்கு(Mohamed Haouas) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது அவரது மனைவி இமானே பிரான்ஸின் ஹெரால்ட்டில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே புகைப்பிடித்து கொண்டு இருந்துள்ளார்.
Getty Images
இதனை பார்த்த முகமது ஹௌவாஸ் ஆத்திரத்தில் பொதுவெளியில் மனைவி இமானே-வை தாக்கியுள்ளார், இதையடுத்து பொலிஸார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
ஓராண்டு சிறை தண்டனை
இந்நிலையில் பொதுவெளியில் மனைவியை தாக்கிய வழக்கை எதிர்கொண்ட முகமது ஹெளவாஸ்-க்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
Getty Images
விசாரணையின் போது நீதிமன்றத்தில் பேசிய முகமது ஹெளவாஸ்(29), அவருக்கு(மனைவி இமானே) புகைபிடிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் என்னிடம் பொய் கூறியுள்ளார், அதனால் நான் என்னிடமே சொல்லிக் கொண்டேன், இவரால் புகையிலை விஷயத்தில் என்னிடம் பொய் கூற முடியும் என்றால் பிற விஷயங்களிலும் பொய் கூற முடியும் என்று என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில விஷயங்களை நான் எண்ணிப் பார்த்தேன், எனவே பொறாமை கொண்டு என்னுடைய கட்டுப்பாட்டை இழந்தேன் என்று தெரிவித்தார். இதற்கிடையில் பிரான்ஸ் ரக்பி கூட்டமைப்பு முகமது ஹௌவாஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
Getty Images
அத்துடன் தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையால் சொந்த நாட்டில் கோடையில் நடைபெற இருக்கும் ரக்பி உலக கோப்பையை(Rugby World Cup) முகமது ஹௌவாஸ் தவறவிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.