தமிழர் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருது: பிரான்ஸ் அமைச்சர் புகழாரம்
தமிழர் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்ட நிலையில், நீங்கள் பிரான்சின் உண்மையான நண்பர் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
டாடா குழும தலைவர்
டாடா குழும தலைவரான நடராஜன் சந்திரசேகரன் என்னும் N சந்திரசேகரனுக்குத்தான் பிரான்சின் உயரிய விருதான செவாலியே (Chevalier de la Légion d'Honneur) என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரன், இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் என்னுமிடத்தில் பிறந்தவாராவார்.
Our Chairman N Chandrasekaran receives the Chevalier de la Légion d’honneur from French Minister for Europe & Foreign Affairs @MinColonna. He was conferred the highest civilian award of France for his contributions to strengthening the trade relationship between India & France. pic.twitter.com/Rk4vJcjQHq
— Tata Group (@TataCompanies) May 17, 2023
டாடா குழுமம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரும், ஐரோப்பிய அமைச்சருமான Catherine Colonna, செவாலியே விருதை வழங்கும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
.@TataCompanies est un acteur majeur du partenariat franco-indien : j'ai eu le plaisir de remettre à son PDG, au nom du Président de la République, les insignes de chevalier de la Légion d'honneur.
— Catherine Colonna (@MinColonna) May 16, 2023
Cher Natarajan Chandrasekaran, vous êtes un ami de la France.#ChooseFrance2023 pic.twitter.com/LVh98GgDGZ
நீங்கள் பிரான்சின் உண்மையான நண்பர்
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரும், ஐரோப்பிய அமைச்சருமான Catherine Colonna, ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சந்திரசேகரன் அவர்களுக்கு பிரான்ஸ் சார்பில் செவாலியே விருதை வழங்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளதுடன், அன்பிற்குரிய நடராஜன் சந்திரசேகரன் அவர்களே, நீங்கள் பிரான்சின் உண்மையான நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"Dear Natarajan Chandrasekaran, you are a true friend of France."
— Emmanuel Lenain (@E_Lenain) May 16, 2023
?? FM @MinColonna today conferred the highest French civilian honour, Légion d'Honneur, on @TataCompanies' chairman for his contribution to ???? ties. #ChooseFrance2023 https://t.co/x0ejFYKZYK