ஐரோப்பாவின் தலைவர்களாக உருவெடுத்த பிரான்ஸ், பிரித்தானியா - செக் பிரதமர் கருத்து
பிரான்சும் பிரித்தானியாவும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த தலைவர்களாக உருவெடுத்துள்ளதாக செக் குடியரசு பிரதமர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தற்போது ஐரோப்பாவில் மிகுந்த ராணுவ சக்தி (Hard Power) கொண்ட நாடுகளாக உருவெடுத்துள்ளன என்று செக் குடியரசு பிரதமர் பெட்ர் ஃபியாலா (Petr Fiala) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ராணுவ செலவின அழுத்தம் ஆகியவற்றால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போர் முடிந்த பின் உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்கும் coalition of the willing ஏற்படுத்துவதில் பிரான்ஸ், பிரித்தானியா முக்கிய பங்காற்றி வருகின்றன.
கடினமான சூழலில் உக்ரைனுக்கு ஆதவு வழங்கிவரும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை மிகவும் பாராட்டுவதாக செக் பிரதமர் கூறியுள்ளார்.
பிரித்தானிய மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதை விட, பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகமாக ஈடுபடுவதை உயர்ந்த வாய்ப்பாக அவர் கருதுகிறார்.
ஜேர்மனி தனது ராணுவ செலவினங்களை அதிகரிக்க 1 டிரில்லியன் யூரோ முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியின் எதிர்கால சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்கா ஐரோப்பாவை பாதுகாக்கும் உத்தரவாதம் வழங்காது என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கூட்டணியாக புதிய பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |