23 ஆண்டுகளில் முதன்முறையாக நட்பு நாடொன்றிற்கு செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி: ஒரு ஆச்சரிய தகவல்
23 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மனிக்கு செல்கிறார் என்றால் அது இமானுவல் மேக்ரான்தானாம்!
நட்பு நாடுகள் ஆனால்...
பிரான்சும் ஜேர்மனியும் நீண்ட காலமாக நட்பு நாடுகள். ஆனால், 23 ஆண்டுகளாக பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனிக்கு சென்றதில்லையாம்.
இந்நிலையில், ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier, மேக்ரானை ஜேர்மனிக்கு அழைத்துள்ளதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை ஜேர்மனியை சந்திக்க இருக்கிறார் மேக்ரான்.
இன்னொரு முக்கிய காரணம்
மேக்ரானின் ஜேர்மனி சந்திப்பின் பின்னணியில் வேறொரு முக்கிய விடயமும் உள்ளது. எலிசி ஓப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தின் 60 ஆவது ஆண்டில், இரு நாடுகளுக்கிடையிலான நட்பை கௌரவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது.
ஆக, இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock இந்த வாரம் பாரீஸ் செல்கிறார். அவர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Catherine Colonnaவை சந்திக்க இருக்கிறார்.