தலையை மொட்டையடித்துக் கொண்ட நண்பர்கள்: கண்கலங்கிய புற்றுநோயுடன் போராடும் தோழி: வீடியோ
புற்றுநோயுடன் போராடும் தோழியை ஆதரிப்பதற்காக நண்பர்கள் சிலர் தங்கள் தலையை மொட்டை அடித்து கொண்ட செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நண்பர்களின் நெகிழ வைக்கும் செயல்
இணையத்தில் சில தினங்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோவில், சில நண்பர்கள் தங்களது தலையை மொட்டை அடித்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் தோழிக்கு ஆதரவு தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்று பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமியின் வீட்டிற்கு வெளியே அவரது சில நண்பர்கள் மொட்டை அடித்த தலையுடன் நின்று கொண்டிருக்க, அதை பார்க்கும் சிறுமி உதட்டில் புன்னகையும் கண்களில் கண்ணீருடன் உணர்ச்சி அலையில் பொங்குகிறார்.
NO ONE FIGHTS ALONE: Teen fighting cancer is surprised by her group of friends when they show up to her house after shaving their own heads in an act of solidarity. If you have friends, you have everything! pic.twitter.com/CELM89caeQ
— GoodNewsMovement (@GoodNewsMVT) May 25, 2023
Goodnews Movement ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த அழகான தருணத்தில் சிறுமி வெளிப்படுத்திய உணர்வுகள் பலரது மனதை கரைத்து உணர்வடைய செய்துள்ளது.
அத்துடன் அந்த பதிவில் “யாரும் தனியாக சண்டை போடுவது இல்லை” (NO ONE FIGHTS ALONE) என்றும் இத்தகைய நண்பர்கள் இருந்தால், அனைத்தும் உங்களிடம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவியும் பார்வையாளர்கள்
மே 25ம் திகதி வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை 17,000 பார்வையாளர்களை இந்த வீடியோ குவித்துள்ளது அத்துடன் 500 லைக்குகளை நூற்றுக்கணக்கான ரியாக்ஷன்களையும் குவித்து வருகிறது.
இந்த வீடியோவின் கமெண்ட்டில் ஒருவர், இத்தகைய நண்பர்கள் இருந்தால் நீங்கள் தனியாக நடக்க வேண்டிய நிலைமை இல்லை, நீங்கள் அனைவரும் அற்புதம் என்று தெரிவித்துள்ளார்.