ஜப்பானிய கடல் உணவுகளுக்கு அதிரடியாக தடை விதித்த சீனா: விளைவுகளை எதிர்கொள்ள எச்சரிக்கை
புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர்
ஜப்பானின் முடிவுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் சீனா உறுதி அளித்துள்ளது. அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் தங்கள் கடல் பகுதியில் விடத் தொடங்கிய நிலையிலேயே சீனா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
@reuters
ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு இந்த வாரம் ஜப்பானுக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, ஒரு மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீர் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஜப்பான் வெளியேற்ற முடிவு செய்துள்ள இந்த தண்ணீரின் அளவானது 500 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது என கூறுகின்றனர். இந்த தண்ணீரானது 2011 சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தின் எரிபொருள் கம்பிகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்டது.
சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும்
இந்த விவகாரம் தொடர்பில் தங்கள் தரப்பு கருத்தை முன்வைத்துள்ள சீனா, 2011 அணுசக்தி பேரழிவு தொடர்பான தண்ணீரை வெளியேற்றும் திட்டத்தில் நிபுணர்களின் கருத்துக்களை முழுமையாக பிரதிபலிக்க ஜப்பான் தவறிவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் சீன நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயார் எனவும் அறிவித்துள்ளது.
2011ல் புகுஷிமா அணுமின் நிலைய பேரழிவுக்கு பின்னர், சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஜப்பானிய உணவின் கதிரியக்க மாசுபாடு பிரச்சினைக்கு அந்த நாடு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஸ்காலப்ஸ் மற்றும் ஜப்பானிய சாக் போன்றவை சீன சந்தையில் பரவலாக பிரபலமாக உள்ள கடல் உணவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |