உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு சீனா அழுத்தம் தர வேண்டும் : ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவிற்கு, சீனா அழுத்தம் தர வேண்டுமென ஜப்பானில் நடந்த ஜி 7 நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜி 7 மாநாடு
ஏழு நாடுகளின் கொண்ட குழுவான ஜி 7 மாநாட்டில், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா தனது கூட்டாளியான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
@reuters
ஜி 7 நாடுகளுக்கான வருடாந்திர உச்சி மாநாடு இந்த ஆண்டு ஜப்பானில் நடத்தப்பட்டது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் ஆகியவை ஜி 7 நாடுகளாக கூட்டணி வகிக்கின்றன.
இம்மாநாட்டில் ஜி 7 நாடுகள் சீனாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்றும், கம்யூனிஸ்ட் நாட்டுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான உறவுகளை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளன.
@reuters
இருப்பினும், ரஷ்யா உக்ரைனில் இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு சீனாவிடம் ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா போர்
இதனிடையே ’ஐ.நா சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் உலகம் முழுதும் நீடித்த அமைதியை ஆதரிக்க சீனாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம்’ என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
மேலும் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போரை, இந்த ஆண்டில் கட்டுப்படுத்துவதில், சீனாவின் பங்கு முக்கியமானதென ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் ஏழு நாடுகளின் குழு தலைவர்கள் ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.