இஸ்ரேலில் 3,000 ராக்கெட்டுகள் வெடித்தன! நான் என் குழந்தைகளுடன், இதயம் வலிக்கிறது - பிரபல ஹாலிவுட் நடிகை
இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான கேல் கெடாட், வலியில் உள்ள தன் மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.
போர் பிரகடனத்தை முன்னெடுத்த பிரதமர்
ஹமாஸ் படைகளின் திடீர் தாக்குதலால் இஸ்ரேல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உடனடியாக போர் பிரகடனத்தை முன்னெடுத்தது.
அங்கு இரண்டாவது நாளில் பலியானோர் எண்ணிக்கை 250 ஆக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் பிரதமர் நீண்டகால போருக்கு துணிந்துள்ளதாக கூறினார்.
இந்த நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகையான கேல் கெடாட் (Gal Gadot) சோகப்பதிவினை வெளியிட்டுள்ளதுடன், இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியுள்ளார்.
கேல் கெடாட் பதிவு
அவரது பதிவில், 'அதிகாலை தொடங்கி 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வெடித்தன. ஹமாஸ் பிணைக் கைதிகளை பிடித்து, இஸ்ரேலில் உள்ள தளங்கள் மற்றும் குடியிருப்புகளை கட்டுப்படுத்துகிறது. 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் கடுமையான சண்டை இன்னும் தொடர்கிறது.
நான் அவர்களின் குரல்களைக் கேட்கிறேன், அவர்கள் கதவைத் தட்டுகிறார்கள். நான் எனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறேன். என் இதயம் வலிக்கிறது. வலியில் இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்' என்றார்.
அவரது மற்றொரு பதிவில், 'நான் இஸ்ரேலுக்கு துணை நிற்கிறேன், நீங்களும் நில்லுங்கள். இந்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் நடக்கும்போது உலகம் வேலியில் அமர முடியாது!' என கூறியுள்ளார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |