துபாயில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்தியர்கள் காயம்; மூன்று பேர் கவலைக்கிடம்
துபாயில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பல இந்தியர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். சுமார் ஒன்பது பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி புன்னோலைச் சேர்ந்த நிதின் தாஸ், ஷனில் மற்றும் நஹீல் ஆகியோர் பலத்த காயங்களுடன் துபாய் ரஷீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிதின் தாஸின் காயங்கள் மிகவும் மோசமாக உள்ளன.
நேற்று இரவு 12.20 மணியளவில் கராமா 'டே டு டே' ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள பின்ஹைடர் கட்டிடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. வாயு கசிந்து வெடித்தது.
Asianet News
அந்த குடியிருப்பில் மூன்று அறைகளில் 17 பேர் வசித்து வந்தனர். இந்த வெடிவிபத்தின் தாக்கத்தில் அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த 2 பெண்களும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Al Karama gas explosion, Dubai Gas Explosion, Malayalis in Dubai Injured