பாலஸ்தீனியர்களுக்கு இது தவிர வேறு வழியில்லை: காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் உறுதி
பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மோசமடையும் பாலஸ்தீனியர்களின் நிலை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 62,895 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், காசா நகரில் 90% வீடுகள் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்தோ இருப்பதாக சர்வதேச அமைப்புகளின் பகுப்பாய்வு படி தெரியவந்துள்ளது.
மேலும், காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பஞ்சம் மற்றும் பட்டினி நிலைகள் உருவாகி உள்ளது, இதனால் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு தவிர வேறு வழியில்லை
காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கை குறித்து X தளத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே பதிவிட்ட தகவலில், பாலஸ்தீனியர்களுக்கு “காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளது.
காசா நகரில் இருந்து வெளியேறி தெற்கு நோக்கி செல்லும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அதிக அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதிகளில் கூடாரங்கள் அமைப்பது, தண்ணீர் வசதிகளை உருவாக்குவது போன்ற ஏற்பாடுகளை இஸ்ரேலிய படை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காசாவின் தெற்கு பகுதியில் இடப்பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் வதந்திகள் முற்றிலும் தவறான தகவல் என்றும் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |