மழை நீரை குடிக்கும் காசா மக்கள்! இஸ்ரேல் போரினால் சீரழியும் பாலஸ்தீனர்கள்
பாலஸ்தீனத்தின் காசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மழை நீரை பிடித்து குடிக்க தொடங்கியுள்ளனர்.
காசாவில் கனமழை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதோடு, ஐ.நாவின் தங்குமிடங்களிலும், தற்காலிக தங்குமிடங்கள் அமைத்தும் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர்.
இதற்கிடையில் காசாவில் கனமழை வேறு பெய்து வருகிறது, இதனால் காசாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வெள்ள பாதிப்புகளால் தங்களிடம் இருந்த ஒரு சில உடமைகளையும் சிலர் இழந்துள்ளனர், மேலும் கடும் குளிர் நிலவுவதால் இரவு நேரங்களில் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மழைநீர் குடிக்கும் மக்கள்
இந்நிலையில் காசாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் மழை நீரை சேகரித்து குடிநீராக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதே சமயம் மழைக்காலங்களில் காசாவில் பரவும் நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மற்றும் அவற்றில் போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் கூடுதல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
The joy of the displaced people at the rain falling in Gaza after the water shortage for 39 days pic.twitter.com/AOEjqWNgeg
— The Fact Finder (@FactualNarrator) November 14, 2023
காசாவில் இதே நிலை நீடித்தால், சுகாதார வசதிகள் மற்றும் தாங்க முடியாத குளிர் ஆகியவற்றினாலும் மக்கள் உயிரிழக்கும் மோசமான நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரியவந்துள்ளது.

ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: கனடா ஆதாரத்தைக் கொடுத்தால் விசாரிக்க தயார்! இந்திய வெளியுறவு அமைச்சர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |