காசாவில் ஹமாஸுக்கு எதிராக மக்கள் போராட்டம்: "ஹமாஸ் வெளியே போ" என கோஷம்!
ஹமாஸை வெளியேற்ற கோரி காசாவில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இஸ்ரேல்-காசா போரின் கொடூரங்களுக்கு மத்தியில், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
நூற்றுக்கணக்கான காசா மக்கள் வீதிகளில் இறங்கி, ஹமாஸ் அமைப்பின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர கோஷமிட்டு பேரணியாக சென்றனர்.
வடக்கு காசாவில் உள்ள பெட் லாஹியா நகரில் நடைபெற்ற இந்த போராட்டம், முகமூடி அணிந்த ஹமாஸ் போராளிகளால் ஒடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், பெட் லாஹியா நகரின் தெருக்களில் இளைஞர்கள் "வெளியே போ, வெளியே போ, ஹமாஸ் வெளியே போ" என ஆவேசமாக கோஷமிட்டனர்.
ஹமாஸ் ஆதரவாளர்கள் கண்டனம்
ஹமாஸ் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தை சிறுமைப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஹமாஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மீண்டும் தொடங்கிய தாக்குதல்
மார்ச் 18 முதல் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கிய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
🇵🇸 Yes — to peace, No — to Hamas! Protests erupt in Gaza against Hamas
— NEXTA (@nexta_tv) March 25, 2025
With constant airstrikes, starvation, and no aid in sight, people in Gaza are taking to the streets — angry, desperate, and betrayed.
Spontaneous protests are breaking out across the Strip. And for the first… pic.twitter.com/003Qu044T4
அத்துடன் ஆயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியதாக குற்றம் சாட்டுகிறது.
அதே நேரத்தில், ஜனவரி மாத ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |