போருக்கு மத்தியில்... ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்கும் ஐரோப்பா
உக்ரைனில் போர் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பா எரிவாயு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கு எரிவாயு
ரஷ்யாவின் Gazprom நிறுவனம் இதை உறுதி செய்துள்ளதுடன், உக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கு எரிவாயு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக சர்வதேச நீதிமன்றங்களில் ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் வழக்குகளை கைவிடாவிட்டால், ஐரோப்பாவிற்கு எஞ்சியிருக்கும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்துவதாக Gazprom முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
2022ல் குழாய்கள் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி என்பது சோவியத் காலத்துக்கு பிந்தைய மிக குறைந்த அளவிற்கு சரிந்தது. மட்டுமின்றி, உக்ரேனில் ஏற்பட்ட மோதலால் Gazprom-ன் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இறக்குமதியை குறைத்துக்கொண்டனர்.
ரஷ்யாவை நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
அத்துடன் முக்கிய குழாய் ஒன்றில் மர்மமான முறையில் பெரும் சேதம் ஏற்பட்டதும் எரிவாயு ஏற்றுமதி சரிவுக்கு காரணமாக அமைந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், பல ஆண்டுகளாக ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை குறைக்க வேண்டும் என ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிரடியாக ராணுவத்தினரை அனுப்பி வைக்க, ரஷ்யாவுக்கு எதிரான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்தது. ஆனால் தற்போது போருக்கு மத்தியில் உக்ரைன் ஊடாக 41.3 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை இறக்குமதி செய்ய ஐரோப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |