எரிவாயு தேவை., ஜேர்மனி, பிரான்ஸ் மீண்டும் ரஷ்யாவுடன் கூட்டு சேர திட்டம்
ரஷ்யாவிலிருந்து எரிவாயுவை மீண்டும் இறக்குமதி செய்ய ஜேர்மனி, பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டில் உக்ரைனில் போர் தொடங்கியபின், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் (EU) கட்டுப்படுத்தியது. இதனால் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் நிதி குறைந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மீண்டும் ரஷ்யாவிலிருந்து எரிவாயுவை (Gas) இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளன என்று Reuters தெரிவித்துள்ளது.
“உக்ரைனில் சமாதானம் ஏற்பட்டால், வருடத்திற்கு 60 முதல் 70 பில்லியன் கன மீட்டர் வரை ரஷ்ய எரிவாயுவை மீண்டும் இறக்குமதி செய்யலாம்,” என்று பிரான்சின் Engie நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி டிடியர் ஹொல்லோ கூறியுள்ளார்.
Engie நிறுவனமும், TotalEnergies நிறுவனமும் இரண்டும் ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் முக்கிய நிறுவனங்களாக இருந்தன.
TotalEnergies நிறுவனத்தின் தலைவர் பேட்ரிக் புயனே, அமெரிக்கா மீது அதிகமாக நம்பிக்கையுடன் இருப்பது அபாயகரமானது என்றும், பல்வேறு மூலங்களில் இருந்து எரிவாயுவை பெறும் வகையில் ஐரோப்பா செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Leuna Chemical Park-ல் உள்ள நிறுவனங்களும் ரஷ்ய எரிவாயு தேவைப்படுவதாகக் கூறியுள்ளன. “எங்களுக்கு மலிவான எரிசக்தி வேண்டும், அது எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை,” என Leuna-Harze நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் க்ளாஸ் பௌர் கூறினார்.
இந்த உரையாடல்கள் நடக்கும் போதும், ரஷ்யாவின் Gazprom நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிவாயு வழங்குவதில் குறைவாகவே உள்ளது. மேலும், உக்ரைன் 2024 இறுதிக்குப் பிறகு வாயு கடத்தும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துள்ளதால், நேரடி குழாய் வாயு வழங்கும் வசதியும் நிறைவடைகிறது.
இதன் மையத்தில், ரஷ்ய வாயு மீண்டும் ஐரோப்பாவுக்குள் வருமா என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |