திருமணமான தம்பதியரின் காப்பீடு திட்டத்தில் மாற்றம்: ஜேர்மன் அரசு திட்டம்
திருமணமான தம்பதியருக்கான காப்பீடு தொடர்பில், ஜேர்மன் அரசு முக்கிய முடிவொன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் ஆனவர்களுக்கான காப்பீடு நிறுத்தம்?
ஜேர்மனியைப் பொருத்தவரை, சில நிபந்தனைகளுடன், பணி செய்வோருக்கு வழங்கப்படும் காப்பீடு பலன்களை, அவர்களுடைய துணைவர் மற்றும் பிள்ளைகளும் பெறலாம்.

இந்நிலையில், ஆளும் CDU/CSU-SPD கூட்டணி, அந்த விடயத்தில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருகிறது.
அதன்படி, பணி செய்பவரின் மனைவி பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவர் தன் கணவரின் காப்பீட்டால் பலனடைய முடியாது என்னும் வகையில் விதி மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.
இந்த மாற்றம் எப்போது அமுலுக்கு வரும் என்பது தெரியவில்லை. இந்த திட்டம் குறித்து ஃபெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான நினா (Nina Warken)விடம் கேட்டபோது, அது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
10 நிபுணர்கள் கொண்ட சுகாதார நிதி ஆணையம் என்னும் அமைப்பு இந்த விடயம் குறித்து ஆராய்ந்துவருவதாகவும், அந்த ஆணையத்தின் பரிந்துரைக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |