பாலி கோவிலில் நிர்வாணமாக திரிந்த இளம்பெண்ணால் பரபரப்பு
இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்குள் நிர்வாணமாக வந்த ஜேர்மன் பெண்
இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றில் ஜேர்மனியை சேர்ந்த தர்ஜா(28) என்ற பெண் சுற்றுலா பயணி ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் கோவிலுக்குள் வந்த ஜேர்மன் சுற்றுலா பயணி தர்ஜா, திடீரென தனது ஆடைகளை கழற்றி ஏறிந்து விட்டு கோவிலுக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளார்.
A video of a German woman nude dancing during a cultural performance in Saraswati Temple, Ubud, Gianyar, Bali, went viral.
— SEA Today News (@seatodaynews) May 25, 2023
The video, which was taken on Mon (5/22), shows Darja Tuschinski dancing without any clothes in the middle of the stage, among Balinese dancers. #SEAToday pic.twitter.com/kVTRgIyDtk
நிர்வாணமாக ஓடிய பெண்ணை கோவிலில் உள்ள பணியாளர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டும் முடியாத காரணத்தால், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர சேவை மற்றும் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த பொலிஸார் கோயிலுக்குள் நிர்வாணமாக சுற்றி திரிந்து பதற்றத்தை ஏற்படுத்த பெண்ணை, புனித தலத்தில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் ஜேர்மன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கட்டணத்தை கூட செலுத்தாமல் இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும் அந்த பெண் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டின் வெளியுறவு கொள்கையின் அடிப்படையில், ஜேர்மன் பெண்ணை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.