ஜேர்மனியில் வேலையின்மை எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்வு
ஜேர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வேலையின்மை எண்ணிக்கை மில்லியனை கடந்துள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 46,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இதனால் ஜேர்மனியில் மொத்த வேலை இழந்தோர் எண்ணிக்கை 3.025 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது பெரும்பாலும் கோடை விடுமுறை காலத்தில் நிறுவனங்கள் ஆட்கள் சேர்க்கும் வேகத்தை குறைத்ததாலும், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார மந்தத்தாலும் ஏற்பட்டுள்ளதாக, ஜேர்மனியின் வேலைவாய்ப்பு முகமை தலைவர் ஆண்ட்ரியா நாஹ்லெஸ் (Andrea Nahles) தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பொருளாதாரம் 2025 இரண்டாம் காலாண்டில் 0.3 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் குறைவாக இருப்பதும் வளர்ச்சியை பாதித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வேலை இழந்தோர் எண்ணிக்கை 1.53 லட்சம் அதிகமாகியுள்ளது.
தொழிலாளர் சந்தை இன்னும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஜேர்மனியின் ifo Institute தெரிவித்துள்ளது. குறிப்பாக சேவை துறையில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
EY consultancy நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஒரு ஆண்டில் ஜேர்மனியின் தொழில்துறையில் 1.14 லட்சம் வேலைகள் குறைந்துள்ளன, இதில் கார் துறையில் மட்டும் 51,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.
இருப்பினும், திறமையான பணியாளர்களை கண்டுபிடிக்க நிறுவனங்கள் இன்னும் சிரமப்படுகின்றன. ifo Institute-ன் மற்றோரு ஆய்வில், 28.1 சதவீத நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை சேர்க்க முடியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளன.
மக்கள்தொகை மாற்றம் காரணமாக திறமையான தொழிலாளர் பற்றாக்குறை நீண்ட காலத்திற்கு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany unemployment 2025, German jobless rate August, Germany labor market crisis, Andrea Nahles unemployment, Germany economy slowdown, Skilled worker shortage Germany, ifo Institute employment report, EY Germany job cuts, German car industry layoffs