NATO பாதுகாப்பிற்காக வரலாற்று சிறப்புமிக்க ரயில் பாதையை மீண்டும் திறக்கும் ஜேர்மனி
பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஐரோப்பாவில் பாதுகாப்பு தேவைகளை முன்னிட்டு 'Iron Rhine' ரயில்வே பாதையை மீண்டும் திறக்க முடிவெடுத்துள்ளன.
இந்த ரயில்வே பாதை 19-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும், ஆனால் 1991 முதல் செயலிழந்த நிலையில் உள்ளது.
இப்பாதை, NATO படைகள் மற்றும் கனரக இராணுவ உபகரணங்களை மேற்கத்திய ஐரோப்பாவில் வேகமாக நகர்த்த உதவும்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முன்னாள் பெல்ஜியம் பிரதமர் Alexander De Croo மற்றும் நெதர்லாந்து பிரதமர் Dick Schoof ஆகியோர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த ரயில்வே பாதை Antwerp துறைமுகத்தையும் ஜேர்மனியின் North Rhine-Westphalia தொழில்துறை மையத்தையும் இணைக்கும்.
திட்டத்தின் அம்சங்கள்
ரயில்வே பாதை, பாலங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் ஆகியவை புதுப்பிக்கப்படும்.
பொது போக்குவரத்தும்,இராணுவ தேவைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் Military Mobility திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் செய்யப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மொத்த செலவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. கட்டுமான பணிகள் சில ஆண்டுகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஃபின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளையும் இணைக்கும் புதிய ரயில்வே திட்டம் NATO தேவைகளுக்காக ஏற்கெனவே ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சிகள் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகளாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |