அமெரிக்காவின் அதிநவீன டோமாஹாக் ஏவுகணைக்கு குறி: ஜேர்மனியின் புதிய திட்டம்
அமெரிக்காவின் அதிநவீன டோமாஹாக் ஏவுகணைகளை வாங்க ஜேர்மனி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க ஏவுகணை வாங்க ஜேர்மனி ஆர்வம்
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான டோமாஹாக் ஏவுகணைகளை வாங்க ஜேர்மனி திட்டமிட்டு வருவதாக பைனான்சியல் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் அமெரிக்க ஏவுகணைகளை நிலைநிறுத்தும் திட்டத்தில் இருந்து அமெரிக்கா விலகி இருக்கும் இந்த நிலையில், அமெரிக்க ஏவுகணைகளை நேரடியாக வாங்கும் திட்டம் அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஏவுகணை மட்டுமின்றி அவற்றை செலுத்தக்கூடிய டைஃபோன்(typhon) ஏவுகணை ஏவுதள அமைப்பையும் வாங்க ஜேர்மனி திட்டமிட்டு வருகிறது.
பொதுவாக டோமாஹாக் ஏவுகணைகள் போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்பட்டு எதிரி நாட்டின் ஆழமான இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் இந்த இராணுவ ஒப்பந்தத்தை உறுதி செய்ய ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் விரைவில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |