ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்... ஜேர்மனி எச்சரிக்கை
ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு ஜேர்மனி தக்க பதிலடி கொடுக்கும் என ஜேர்மன் சேன்ஸலர் எச்சரித்துள்ளார்.
பதிலடி கொடுப்போம்...
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் உக்ரைன் போர் தொடர்பில் பேசும்போது, தங்கள் அணியினர் நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு குறித்து பேசிக்கொண்டதாக தெரிவித்தார்.

நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அந்த அமைப்பின் அனைத்து நாடுகள் மீதான தாக்குதலுக்கு சமம் என்கிறது நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு.
அப்படி ஒரு உறுப்பு நாடு தாக்கப்படும்போது, மற்ற நாடுகள் அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள், அது ராணுவ நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசிய மெர்ஸ், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்தார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்தார்.

உக்ரைனில் மற்ற நாடுகளின் படைகள் களமிறக்கப்படுதற்கு புடின் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.
ஆனால், ஜேர்மன் சேன்ஸலரோ, போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.
புடின் பல விடயங்களுக்கு ‘இல்லை, முடியாது’ என்றே கூறிவருகிறார், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விடயத்தில், ஒரு கட்டத்தில், அவர் ‘சரி’ என்று சொல்லவேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |