திருமணத்திற்கு முன் காதலனை சந்தித்த மணமகள்: தோழியின் செயலால் மணமகன் எடுத்த திடீர் முடிவு
ஆப்பிரிக்க நாடான கானாவில் முன்னாள் காதலனை மணப்பெண் சந்தித்ததை அறிந்த மணமகன் சில மணி நிமிடங்களில் நடக்க இருந்த திருமணத்தை தடாலடியாக நிறுத்தியுள்ளார்.
இணையத்தில் வைரல்
சமீபத்திய காலமாக திருமண மேடை வரை வந்த கல்யாணங்கள் கூட இறுதி நொடியில் எதிர்பாராத காரணங்களால் தடைபடுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.
உதராணமாக இந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் மணமகளுக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததற்காக ஆத்திரமடைந்து காவல் நிலையம் வரை சென்று பிரிந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான கானாவில் தடைபட்டு போன திருமணம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் மணப்பெண் கோபமாக காணப்படும் மணமகனின் காலில் விழுந்து கதறி அழும் காட்சிகளும், மணமகன் ஆவேசமாக பேசுவதும் இடம் பெற்றுள்ளது.
பாதியில் நின்ற திருமணம்
அந்த வீடியோவின் பின்னணி என்வென்றால், பெயர் அறியப்படாத மணப்பெண் திருமணம் ஆவதற்கு முன்பு தன்னுடைய முன்னாள் காதலனை சந்தித்து விட்டு வந்து இருப்பதை மணமகன் கண்டறிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் எந்த மறுபரிசீலனையும் செய்யாமல் தடாலடியாக நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் கவலையடைந்த மணமகள் நடு ரோட்டில் கீழே அழுது புரண்டு கெஞ்சியுள்ளார். ஆனால் மணமகன் சிறு அசைவு கூட கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
முன்னாள் காதலனை மணமகள் பார்த்துள்ளார் என்பதை மணமகளின் நெருங்கிய தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.