குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாக்குதல் நடத்திய பெண்: இருவர் பலி, 10 பேர் காயம்
சீனாவில், சிறுபிள்ளைகள் படிக்கும் ஆரம்பப்பள்ளி ஒன்றில் பெண்ணொருவர் நுழைந்து கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாக்குதல்
நேற்று திங்கட்கிழமை மதியம், சீனாவின் Guixi நகரில் அமைந்துள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் நுழைந்த ஒரு பெண், கத்தியால் அங்கிருந்தவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளார்கள், 10 பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றிய பெண்ணின் பெயர் Pan (45). அவர் எதற்காக குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவில்லை. அத்துடன், தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.
தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஒரு பெண் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையில், அந்தப் பெண்ணை கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |