PUBG, Facebook காதலுக்கு பிறகு, எல்லையை கடக்க முயன்ற Instagram காதல்; மைனர் பெண் கைது
இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க மைனர் பெண் ஒருவர் பாக்கிஸ்தான் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், PUBG லவ் மூலம் காதலனைத் தேடி பாகிஸ்தான் பெண் இந்தியா வந்த நிலையில், இந்திய பெண் தனது பேஸ்புக் நண்பரை சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்றார். தற்போது அதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த தனது நண்பரை சந்திக்க மைனர் பெண் ஒருவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றுள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சிறுமியை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
சர்வதேச பயணத்திற்கு தேவையான ஆவணங்கள் சிறுமியிடம் இல்லை என்று விமான நிலைய நிலைய அதிகாரி திக்பால் சிங் தெரிவித்தார். குறித்த சிறுமி ஸ்ரீமதோபூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தனது நண்பரை சந்திக்க விமான நிலையத்திற்கு சென்றதாக சிறுமி பொலிசாரிடம் கூறியுள்ளார். பின்னர் பொலிஸார் சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் வந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jaipur girl Pakistan Lover, Instagram Love, Facebook Love