பாட்டியின் வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் இருப்பதாக சக மாணவர்களிடம் பகிர்ந்த பள்ளி மாணவி.., அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
மாணவியை மிரட்டி அவரது பாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரூ.80 லட்சம் மோசடி
இந்திய தலைநகர் டெல்லி, குருகிராமைச் சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய பாட்டி அவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
அதன் மூலம் கிடைத்த ரூ.80 லட்சம் பணத்தை தனது வங்கிக்கணக்கில் போட்டு வைத்துள்ளார். அதற்கான ஒன்லைன் பணபரிமாற்றத்திற்காக பேத்தியின் உதவியை நாடியுள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவி இது குறித்து சக மாணவர்களிடம் பெருமையாக பேசியுள்ளார். அப்போது, இந்த விடயம் தெரிந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது சகோதரனிடம் கூறியுள்ளார்.
அவர் இந்த விடயம் குறித்து தனது நண்பர் சுமித் கட்டாரியாவிடம் கூறியுள்ளார். பின்னர், பணத்தை பறிப்பதற்காக சுமித் கட்டாரியா சிறுமியுடன் ஒன்லைனில் நட்பாக பழகியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் புகைப்படங்களை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் கூறிய செல்போன் எண்ணிற்கு பாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து சிறுமி பணம் அனுப்பியுள்ளார். இதனால், பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் காலியானது.
இதில், மாணவி டியூசன் படிக்கும் இடத்திற்கு பணம் கேட்டு மிரட்டியவர்களில் ஒருவர் வந்துள்ளார். இதனால் மாணவி சோகத்துடன் இருந்துள்ளார்.
இது குறித்து டியூசன் ஆசிரியர் கேட்டதும், நடந்த விவரத்தை சிறுமி கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் குடும்பத்திற்கு ஆசிரியர் தெரிவித்ததும், அவரது பாட்டி கடந்த டிசம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி தற்போது இது தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டு ரூ.36 லட்சத்தை மீட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |