இந்தியா-ரஷ்யாவின் செயலால்...உச்சம் தொடும் உலகளாவிய உணவு பொருட்கள் விலை
ரஷ்யா மற்றும் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பிறகு உலகளாவிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் மற்றும் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கை
உலக அளவில் பெரும்பாலான அளவு கோதுமை மற்றும் சோளம் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர், தானிய ஏற்றுமதிக்காக வளர்ந்த நாடுகளை எதிர்பார்த்து காத்து இருக்கும் வளரும் நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
AP
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் பின்விளைவாக சமீபத்தில் உக்ரைனிய தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது. அதே சமயம் எதிர்பார்த்ததை விட விரைவாகவே El Niño வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையை கொண்டு வந்து ஆசியாவின் பல பகுதிகளில் அரிசி உற்பத்தியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியா பாஸ்மதி அல்லாத சில வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் தடை விதித்தது.
இதனால் அரிசி மற்றும் தாவர எண்ணெய் ஆகிய உணவு பொருட்களின் உலகளாவிய விலை மாதத்தில் முதல் முறையாக உயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
AP
அதிகரித்த உணவு பொருட்கள் விலை
இந்நிலையில் அரிசி மற்றும் தாவர எண்ணெய்க்கான அதிக செலவால் உணவு பொருட்களின் விலை உயர்வு கடந்த ஜூனில் இருந்து ஜூலை 1.3% அதிகரித்துள்ளது என்று உலகளாவிய உணவு பொருட்களின் விலைகளை மாதாந்திர கணக்கில் கண்காணிக்கும் உணவு விலைக் குறியீடு(FAO) அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு சர்வதேச அளவில் கோதுமையின் விலை ஜூன் மாதத்தில் இருந்து ஜூலையில் 1.6% சதவீதம் அதிகரித்துள்ளது.
AP
இந்தியாவின் ஏற்றுமதி தடைக்கு பிறகு அரிசியின் விலையானது ஜூன் மாதத்தில் இருந்து ஜூலையில் 2.8% உயர்ந்துள்ளது, மேலும் இதன் மூலம் 2011 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 19.7% என்ற அளவை இந்த வருடம் தொட்டுள்ளது என்று FAO தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |