மெஸ்ஸி vs ரொனால்டோ: யார் சிறந்த வீரர்? ஸ்பெயின் முன்னாள் மேலாளர் கூறிய பதில்
முன்னாள் ரியல் மாட்ரிட் மற்றும் ஸ்பெயின் மேலாளர் வின்சென்ட் டெல் போஸ்க், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு இடையில், மெஸ்ஸியை சிறந்த வீரராக தேர்வு செய்வதாக கூறியுள்ளார்.
2022 FIFA உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுடன் வென்று, போட்டியில் சிறந்த வீரராக கோல்டன் பந்தைப் பெற்ற பிறகு மெஸ்ஸி பெரும்பாலான மக்களுக்கு 'GOAT' (Greatest Of All Time) விவாதத்தைத் தீர்த்தார்.
இந்நிலையில், ஸ்பெயின் முன்னாள் மேலாளர் வின்சென்ட் டெல் போஸ்க் (Vincente Del Bosque), இந்த தலைமுறையின் இரண்டு சிறந்த வீரர்களில் மெஸ்ஸியை தேர்ந்தெடுப்பேன் என்றார்.
சிறந்த வீரர் மெஸ்ஸி
“நான் பார்த்த சிறந்த வீரர் மெஸ்ஸி. கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இடையே, நான் மெஸ்ஸியை எடுப்பேன்," என்று டெல் போஸ்க் கூறினார்.
2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியின் பிரதிநிதியாக மெஸ்ஸியைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் முயற்சித்ததாக டெல் போஸ்க் கூறினார். ஆனால் மெஸ்ஸி தனது தேசத்தின் மீதான அன்பின் காரணமாக அதனை மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கால்பந்தில் எனக்குத் தெரிந்த அனைத்து வீரர்களிலும், என்னைப் பொறுத்தவரை, மெஸ்ஸியின் நிலைத்தன்மை மற்றும் ஒரு வீரராக அவரது தரம் ஈர்க்கக்கூடியதாக இருந்ததாகவும், மெஸ்ஸி சில அற்புதமான சீசன்களைக் கொண்டிருந்தார் மற்றும் எப்போதும் தனது அணியை முன்னோக்கி வழிநடத்தினார் என்றும் டெல் போஸ்க் கூறினார்.
Getty
மெஸ்ஸியின் முன்னாள் பயிற்சியாளர்
பார்சிலோனாவில் மெஸ்ஸியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய மான்செஸ்டர் சிட்டியின் தலைவருமான பெப் கார்டியோலாவும் (Pep Guardiola) மெஸ்ஸியை சிறந்த வீரராக தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு
கத்தாரில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த FIFA உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் பெனால்டியில் தோற்கடித்து, ஏழு முறை பலோன் டி'ஓர் வென்ற சிறந்த வீரரான மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பதற்கு முன் அர்ஜென்டினாவுக்காக 36 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.
Getty