அண்ணாமலை செல்வது பாத யாத்ரா அல்ல .. பாவ யாத்ரா! காயத்ரி ரகுராம் விமர்சனம்
இந்திய மாநிலம் தமிழக பாஜக தலைவர் செல்வது பாத யாத்ரா அல்ல, பாவ யாத்ரா என்று நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து பேசியுள்ளார்.
அண்ணாமலையின் பாத யாத்திரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
குப்பையில் வீசப்பட்ட மனுக்கள்
இந்நிலையில், அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பெறப்படும் மனுக்கள் குப்பையில் வீசப்பட்டதாக கூறப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்ட போது, ரமா என்ற பெண் கோரிக்கை மனு அளித்த சில நேரங்களில் அந்த மனுவானது சாலையில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த மனுவில் தனியார் நிறுவனங்களின் வாங்கிய கடன்களை கட்டுவதற்கு வழி இல்லமால், அதனை ரத்து செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராம் ஆவேசம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டில்,"இது ஒரு "என் மக்கள், என் மண்" யாத்திரை அல்ல. அது "என் நண்பர்கள் பணம், என் விளம்பரம்" பாவ யாத்ரா.
அவரால் எதுவும் செய்ய முடியாது என்பது அப்பாவி மக்களுக்கு புரியவில்லை. புகார் அனைத்தும் மண்ணுக்கு மண் செல்கிறது. கடைசியில் திமுகவை இழிவுபடுத்துவதற்காக அண்ணாமலையும் அவரது போலி அணியும் அவரது புகார் பெட்டியில் ஒரு போலி புகாரை எழுதுவார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
இது ஒரு "என் மக்கள், என் மண்" யாத்திரை அல்ல. அது "என் நண்பர்கள் பணம், என் விளம்பரம்" பாவ யாத்ரா. அவரால் எதுவும் செய்ய முடியாது என்பது அப்பாவி மக்களுக்கு புரியவில்லை. புகார் அனைத்தும் மண்ணுக்கு மண் செல்கிறது. கடைசியில் திமுகவை இழிவுபடுத்துவதற்காக அண்ணாமலையும் அவரது போலி அணியும்… pic.twitter.com/UlbLoMgA24
— Gayathri Raguramm ?? (@Gayatri_Raguram) August 4, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |