புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை - முக்கிய காரணங்கள்
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இன்று (செப்டம்பர் 1, 2025) MXC தங்கம் 2 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,05,937 என்ற உச்ச விலையை எட்டியது.
அதேபோல், MXC வெள்ளி 1.9 சதவீதம் உயர்த்து 1 கிலோவிற்கு ரூ.1,24,214 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்காவின் மத்திய வங்கி (US Federal Reserve) வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிரிபார்க்கப்படும் நிலைமை என கூறப்படுகிறது.
வட்டி விகிதம் குறைந்தால், தங்கம் போன்ற முதலீடுகள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தும், ஏனெனில் அவை பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.
Jerome Powell உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் வட்டி குறைப்பு குறித்து நேரடியாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி கொள்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணமாக உள்ளது.
அதனுடன், அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவதும் தங்கத்தின் விலையை உயர்த்துகிறது, ஏனெனில் இது பிற நாணயங்களில் தங்கத்தை வாங்க எளிதாக்குகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |