கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய CEO ஆக சுந்தர் பிச்சை இருக்கிறார் என்பது யாரும் அறிந்த விடயமே. இவருடைய சொத்து மதிப்பானது தற்போது 390 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதை முறியடிக்கும் விதமாக தற்போது Google Cloud தலைமை செயல் அதிகாரி இருக்கிறார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
யார் இந்த Google Cloud CEO?
கேரளாவில் பிறந்து, பெங்களூருவின் செயின்ட் ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து, தனது சகோதரருடன் சேர்ந்து IIT மெட்ராஸில் படிப்பைத் தொடர்ந்தவர் தான் தாமஸ் குரியன்.
மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் Stanford Graduate School of Business கல்லூரியில் MBA பட்டம் பெற்ற குரியன்,McKinsey and Company என்ற இடத்தில் தனது தொழிலை தொடங்கினார்.
குறித்த கம்பெனியில் 6 வருடங்களாக வேலை செய்தார். பின் Oracle கம்பெனிக்கு மாறினார், அங்கு அவர் 22 ஆண்டுகள் செலவழித்து 32 நாடுகளில் 35,000 நபர்கள் கொண்ட குழுவை வழிநடத்தினார்.
2018 இல் Oracle கம்பெனியில் இருந்து வெளியேறி Google நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்தார்.
2018 ஆம் ஆண்டு அவர் Google Cloud இல் தலைமைப் பொறுப்பை ஏற்று சரியான முறையில் ஊழியர்களை வழிநடத்தி சென்றார். தங்களது உற்பத்தி திறமை மேம்படுத்துவதற்காக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினார்.
இவருடைய சொத்து மதிப்பு
உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய CEO ஆக சுந்தர் பிச்சை இருக்கிறார். 2.14 ட்ரில்லியன் மதிப்புள்ள Google நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு சுமார் 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது.
அந்த வருடத்தில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பானது சுமார் ரூ.10,215 கோடியாக இருந்தது. ஆனால் அதை முறியடித்தார் தாமஸ் குரியன். அவருடைய சொத்து மதிப்பானது ரூ.15,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |