இந்த நாட்டில் மட்டும் Google Pay சேவை நிறுத்தம்.., அதற்கு பதிலாக இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
கூகுள் நிறுவனத்தின் Google Pay சேவை அமெரிக்காவில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Pay
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது.
Google Pay, Paytm, PhonePay என எந்த UPI முறை என்றாலும் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர்.
அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக Google Pay மூலம் அனைத்து இடங்களிலும் பணத்தை பரிமாறிக் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் நிறுத்தம்
அதே போல அமெரிக்காவிலும் லட்சக்கணக்கான மக்கள் Google Pay பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் வரும் ஜூன் 4 -ம் திகதி முதல் Google Pay வசதி நிறுத்தப்படும் என்று Google நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சேவையானது இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Pay app நிறுத்தப்பட்டாலும் இந்த வசதிகளை Google Wallet -ல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், Google Pay ஆப்பை விட Google Wallet அதிகமாக பயன்படுத்துவதால் இந்த முடிவை கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது என்று தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |