இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 12,600 விலங்குகள் - என்ன பணிகள் தெரியுமா?
இந்திய ராணுவம், முப்படைகள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளுடன் உலகளவில் 4வது பெரிய ராணுவமாக உள்ளது.
இந்திய ராணுவத்தில் 14.80 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இதில், 12.30 லட்சம் வீரர்கள் தரைப்படையிலும், 1,39,576 வீரர்கள் விமானப்படையிலும், 67,228 வீரர்கள் கடற்படையிலும் உள்ளனர்.
அதே போல் இந்திய ராணுவத்தில், 12,600 விலங்குகளும் பணியாற்றுகிறது.
இந்திய ராணுவத்தில் 12,600 விலங்குகள்
மாநிலங்களவையில், ராணுவத்தில் விலங்குகளின் பயன்பாடுகள் குறித்த கேள்விக்கு, பாதுகாப்பு துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், நாய்கள் உட்பட 12,600 விலங்குகள் ராணுவத்தில் உள்ளது.
ராணுவத்தின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம், இந்த விலங்குகளின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து விலங்குகளுக்கும் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்த விலங்குகளுக்கு சிறப்பு அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விலங்குகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் சிறப்பு துறைகளுடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விலங்குகளை அதன் பணிக்காலம் மற்றும் ஓய்வு பின்னர் எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த கொள்கைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விலங்குகள் வெடிகுண்டுகளை கண்டறிவது, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள்,பாலைவனம் மற்றும் மலைப்பாங்கான கடினமான பகுதிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |